தினமலர் எக்ஸ்பிரஸ் | 03 OCT 2024 | 05 AM | Dinamalar Express | Dinamalar

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 окт 2024
  • #Dinamalar #Expressnews #todayheadlines #tamilnadunews #tamilnaduheadlines #tamilnews #mkstalin #dmk #pmmodi #bjp #annamalai #senthilbalaji #stalin
    யூதர்களின் புத்தாண்டு பிறந்ததை அடுத்து, இஸ்ரேல் மக்களுக்கு பிரதமர் பெஞ்சமின் நாதன்யாகு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். எதிர் வரும் ஆண்டு வெற்றிக்கானதாக அமையட்டும். இஸ்ரேலை அழிக்க நினைக்கும் ஈரானின் எண்ணம் ஒரு போதும் பலிக்காது. இஸ்ரேலை காக்கும் முயற்சியில் உயிர் நீத்த வீரர்களுக்கு இதயப்பூர்வ அஞ்சலி என, பிரதமர் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.
    இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரானுக்கு ஐநா சபை கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் தினசரி நடக்கும் ஆயுத தாக்குதல்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சில் விதிகளை மீறும் செயல் என ஐநா பொதுச்செயலாளர் ஆன்டனியோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லாக்கள் நடத்திய தாக்குதலில் தங்கள் ராணுவ வீரர்கள் 8 பேர் பலியானதாக இஸ்ரேல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, ஈரான் - இஸ்ரேல் இடையே பெரிய அளவில் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், பாேரை தடுக்க ஐநா பாதுகாப்பு சபை அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.#Expressnews

Комментарии • 1